ரணிலின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்கிறேன்: சஜித்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 April 2018

demo-image

ரணிலின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்கிறேன்: சஜித்!

yUnuI2Q

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாழ்நாள் தலைவர், பிரதித் தலைவர் இருக்க வேண்டிய அவசியமில்லையெனவும் பதவிகளில் மாற்றம் வர வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி மாற்றங்கள் தொடர்பில் ஆலோசித்து வரும் புதிய குழுவில் கருத்து வெளியிடப்பட்டுள்ள நிலையில் கருத்துக் கணிப்புக்கு முகங்கொடுக்கத் தயார் என தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.


இதேவேளை, கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் தலைவர் பதவியில் ரணில் விக்கிரமசிங்கவே தொடர்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் தானும் அதை ஏற்றுக்கொள்வதாகவும் சஜித் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கூடிய குறித்த குழு பதவி மாற்றங்கள் குறித்து தீர்வொன்றை எட்டாத நிலையில் இன்று மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment