வத்தளை: மிளகாய்த் தூள் வீசி வங்கியில் கொள்ளை! - sonakar.com

Post Top Ad

Friday 27 April 2018

வத்தளை: மிளகாய்த் தூள் வீசி வங்கியில் கொள்ளை!


வத்தளை, வங்கிக் கிளையொன்றின் காவலாளிக்கு மிளகாய்த் தூள் வீசி வங்கிக்குள் நுழைந்த கொள்ளையன் 750,000 ரூபாவை துணிகரமாகக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.


மோட்டார் சைக்கிளில் தனியாக வந்த நபர் இவ்வாறு காவலாளிகள் மீது மிளகாய்த் தூள் வீசிவிட்டு உள் நுழைந்து கொள்ளையடித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வத்தளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment