அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு அதே அரசின் அங்கமாக இருக்க முடியாது என தெரிவித்துள்ள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்திருந்தால் இந்நேரம் தானாகவே பதவி விலகியிருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணையை ஆதரித்த 16 சு.க உறுப்பினர்களும் தமது பதவியைக் கைவிட ஜனாதிபதியிடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கின்ற அதேவேளை, அவர்களை பதவி நீக்கும்படி ஐக்கிய தேசியக் கட்சியினர் கோரி வருகின்றனர்.
எனினும், ஐ.தே.க சார்பிலான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறும்படி பிரதமர் உத்தரவிட்டுள்ளதோடு ஜனாதிபதி இது விடயத்தில் மௌனம் காத்து வருகிறார். இந்நிலையிலேயே, அர்ஜுன இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment