மத்திய வங்கியை பிரதமரே விட்டுக் கொடுத்தார்: அஜித் - sonakar.com

Post Top Ad

Monday, 2 April 2018

மத்திய வங்கியை பிரதமரே விட்டுக் கொடுத்தார்: அஜித்


மத்திய வங்கி மற்றும் இளைஞர் சேவைகள் விவகாரங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளின் பேரிலேயே அவரது பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார் பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா.

நாளை மறுதினம் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங்கொடுக்கவுள்ள நிலையில் ரணில் தனது பொறுப்புக்களைத் தானாகவே முன் வந்து விட்டுக் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மத்திய வங்கி பிணை முறி மோசடியே நம்பிக்கையில்லா பிரேரணையின் அடிப்படைக் காரணம் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கிறது.இந்நிலையில், வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என மஹிந்த அணி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment