
ஸ்ரீலசுகட்சி - ஐக்கிய தேசியக் கட்சி இணைந்த கூட்டாட்சியே தொடரும் எனவும் புதிய அமைச்சரவையிலும் ஸ்ரீலசுக உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார் பிரதமா ரணில் விக்கிரமசிங்க.
அரசுக்கு ஆதரவளிக்கும் சு.க உறுப்பினர்கள் புதன் கிழமை இரவு ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதன் தொடர்ச்சியில் தன்னையும் சந்தித்ததாகவும் இதன் போது முழு மனதுடன் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றில் சு.க துணையின்றி நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என சு.க அதிருப்தியாளர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment