ரணிலே தொடர்ந்தும் பிரதமர்; நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி! - sonakar.com

Post Top Ad

Wednesday 4 April 2018

ரணிலே தொடர்ந்தும் பிரதமர்; நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி!


கூட்டு எதிர்க்கட்சியினரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியில் முடிந்துள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையைக் கையளித்த போதிலும் மஹிந்த ராஜபக்ச அதில் கையொப்பமிட்டிருக்கவில்லை. இந்நிலையில் இன்று வாக்கெடுப்பு இடம்பெற்றதோடு நிமல் சிறிபால டிசில்வா, மஹிந்த அமரவீர, உட்பட்ட கூட்டு எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் சபையில் சமூகமளித்திருக்கவில்லை.  எனினும் மஹிந்தவும் நாமலும் இறுதி நேரத்தில் சமூகமளித்ததோடு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.முன்னரே அறிவித்தது போன்று ஜே.வி.பி பிரேரணையை ஆதரித்திருந்த அதேவேளை அமைச்சர்கள் பௌசி, ஹிஸ்புல்லா மற்றும் பைசர் முஸ்தபா, காதர் மஸ்தான், துமிந்த திசாநாயக்க, ரஞ்சித் சியம்பலபிட்டிய, நிசாந்த முத்துஹெட்டிகமகே உட்பட  26 பேர் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

ஈற்றில், 122:76 எனும் வித்தியாசத்தில் 46 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூகமளிக்காதவர்களின் பெயர்ப் பட்டியல்:
Mahinda Amaraweera
Sarath Amunugama
Nimal Siripala De Silva
Duminda dissanayake
Faizer Musthapha
Ranjith Siyambalapitiya
Mahinda Samaraweera
Wijith Wijemuni Soyza
Piyasena Gamage
Mohan Lal Gueru
Shriyani Wijewickrama
Lakshman Seneviratne
MLAM Hisbullah
AHM Fowzie
Lasantha Alageyawanna
Sarathi Dushmantha
Manusha Nanayakara
Indika Bandaranayake
Nishantha Muthuhettigama
Muthu Sivalingam
Malik Jayathilaka - 21
Arumugam Thondaman
Weerakumara Dissanayake
Cader Mastan
Ramanathan + I missed ONE too 😀

No comments:

Post a Comment