வரலாறு படைக்கப் போகும் கிம்; தெ.கொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை! - sonakar.com

Post Top Ad

Thursday 26 April 2018

வரலாறு படைக்கப் போகும் கிம்; தெ.கொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை!1953 கொரிய யுத்தத்தின் பின் முதற்தடவையாக தென் கொரியாவுக்குள் நுழையப்  போகும் வட கொரிய அதிபராக வரலாறு படைக்கப் போகிறார் கிம்.


அமெரிக்காவின் சிம்மசொப்பனமாகத் திகழநது வந்த கிம், அணு ஆயுத வல்லமையைத் துரிதமாக அபிவிருத்தி செய்து வெற்றியும் கண்டுள்ள நிலையில் தற்போது ட்ரம்ப் நிர்வாகம் நட்பு பாராட்ட ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை தென் கொரியாவுக்குள் நேரடியாகக் காலடி எடுத்து வைக்கும் கிம் அங்கு அந்நாட்டின் ஜனாதிபதி மூனைச் சந்தித்து நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment