பலஸ்தீன இளைஞனை சுட்டவருக்கு 'மெடல்': இஸ்ரேல் அமைச்சர் - sonakar.com

Post Top Ad

Tuesday, 10 April 2018

பலஸ்தீன இளைஞனை சுட்டவருக்கு 'மெடல்': இஸ்ரேல் அமைச்சர்


பலஸ்தீன இளைஞர் ஒருவரை ஸ்னைப்பர் தாக்குதல் மூலம் சுட்ட தமது படையினருக்கு மெடல் வழங்கப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கருத்து வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.



இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூவரில் ஒருவரை இவ்வாறு துப்பாக்கியால் சுட்டு, அதன் காணொளிப் பதிவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு கொண்டாடி வரும் இஸ்ரேலிய படையைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு மெடல் வழங்கப் போவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னணியில், பல்வேறு கண்டனங்கள் வெளியாகி வரும் நிலையில் காலில் தான் சுட்டதாகவும் ஒளிப்பதிவு செய்தவர் விசாரிக்கப்படுவார் எனவும் இஸ்ரேல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Avigdor Lieberman (file photo)
Israeli Defense Minister Avigdor Lieberman

No comments:

Post a Comment