ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீரவும் கோமாளிகள் எனவும் அவர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.
குறித்த இருவரும் பதவி நீக்கப்பட வேண்டும் என தெரிவித்து வரும் குரூப் 16, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டை மஹிந்த தரப்பிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, பல சு.க உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment