
முஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
நேற்றைய (17) தினம் லண்டனில் முஸ்லிம்களுடன் இரு வேறு சந்திப்புகள் இடம்பெற்றது. அதில் ஒன்று தூதரகத்தால் இயக்கப்படும் பினாமி அமைப்புடன் இடம்பெற்றிருந்தது. மற்றைய நிகழ்வான புலம்பெயர்ந்தோர் அமைப்புடனான சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு முகங்கொடுத்த நிலையில் தான் எதிர்நோக்கிய பிரச்சினைகள் குறித்து விளக்கிய போதே மைத்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தம்மை சந்திக்கும் ஒவ்வொரு இனத்தவரும் தமது பக்கத்தில் இருந்து மாத்திரமே குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் சில ஊர்களில் முஸ்லிம்கள் தமக்குள் ஆயுதங்களை விநியோகித்துக் கொள்வதாக தம்மிடம் நேரடியாகவே முறையிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தம்மை சந்திக்கும் ஒவ்வொரு இனத்தவரும் தமது பக்கத்தில் இருந்து மாத்திரமே குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் சில ஊர்களில் முஸ்லிம்கள் தமக்குள் ஆயுதங்களை விநியோகித்துக் கொள்வதாக தம்மிடம் நேரடியாகவே முறையிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் தனித்தனி இனக்குழுக்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் சமூகங்களை வைத்துக் கொண்டு நாட்டில் ஐக்கியத்தை உருவாக்குவது கடினம் எனவும் அவர் இத்தருவாயில் தெரிவித்ததாக நிகழ்வில் கலந்து கொண்ட சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் இர்பான் இக்பால் தெரிவித்தார்.
இதேவேளை, எம்மதத்தவராக இருப்பினும் 'இனவாதம்' பேசி இனங்களுக்கிடையில் முறுகலை உருவாக்கும் அனைவரையும் கைது செய்து சிறையிலடைக்க நாட்டில் சட்டம் எதுவும் இல்லையென இச்சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
Musimgal thanpathuhaapukkaaha aayutham weithirindirupaarhal but singalawarhal aayuthathai kayil eduthukondu matrawarkalay kolwathatkaaha roadla thirindhaarkal athu unga kannukku welangallayaa saaar
Post a Comment