
இனவாதிகள் திகனயில் சுதந்திரமாக அலுவலகம் வைத்து இயங்கி, இன வன்முறையைத் தூண்டிப் பேரழிவை ஏற்படுத்தும் வரையில் மௌனம் காந்திருந்த பொலிசார் தற்போது கண்டியில் மேலும் பலரைக் கைது செய்ய பிரத்யேக குழுவொன்றை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
300க்கும் அதிகமானோர் ஏலவே தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சிசிடிவி மற்றும் வாய்மூல சாட்சிகளின் அடிப்படையில் மேலும் பலரைக் கைது செய்யவுள்ளதாகவும் இதற்கென பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரத்யேக குழுவொன்று கண்டிக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினமும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உட்பட்ட குழுவினர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment