தங்க நகைகள் வாங்கும் போது அவதானம்! - sonakar.com

Post Top Ad

Thursday 26 April 2018

தங்க நகைகள் வாங்கும் போது அவதானம்!


தங்க இறக்குமதி மீது வரி அதிகரிக்கப்பட்டிருப்பதன் பின்னணில் சந்தையில் வாடிக்கையாளர்களைக் கவர தரம் குறைந்த தங்கம் விற்பனை செய்யப்படுவதாகவும் இது குறித்து வாடிக்கையாளர்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது தேசிய இரத்தினக் கல் மற்றும் தங்க நகைகளுக்கான அதிகார சபை.


தங்கத்தின் தரம் குறித்த சான்றிதழைப் பரிசோதிக்காது கொள்வனவு செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விலையுயர்வை சமாளிக்க தரம் குறைந்த தங்கம் சந்தையில் விற்பனை செய்யப்படுவது குறித்து அவதானமாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவுக்கு தயாரிப்போ, ஏற்றுமதியோ இல்லாத நிலையில் தங்கம் மீதான வரி அறிமுகப்படுத்தப்பட்டதாக அரசு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment