தகுதியுள்ளவர்களுக்கே அமைச்சுப் பதவி: ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Tuesday 24 April 2018

தகுதியுள்ளவர்களுக்கே அமைச்சுப் பதவி: ஜனாதிபதி


புதிய அமைச்சரவையில் தகுதியுள்ளவர்களுக்கே அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



குரூப் 16 பிரளயத்தில் ஈடுபட்டு மஹிந்த அணியில் இணைந்து கொள்ளவுள்ள நிலையில் ஸ்ரீலசுகட்சியின் ஆறு அமைச்சுப்பதவிகள் வெற்றிடமாகவுள்ளது. இதெவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் புதிய அமைச்சரவையொன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல தடவைகள் தேதி குறிக்கப்பட்டும் இதுவரை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவில்லை.. எனினும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment