ஸ்ரீலங்கா பொலிஸ் 'கொந்தராத்து' காரர்கள்: இனவாதி அமித்! - sonakar.com

Post Top Ad

Tuesday 10 April 2018

ஸ்ரீலங்கா பொலிஸ் 'கொந்தராத்து' காரர்கள்: இனவாதி அமித்!கண்டி, திகன முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறையை அரங்கேற்றிய மஹசோன் பலகாயவின் இனவாதி அமித் வீரசிங்க உட்பட பத்துப் பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொலிசார் கொந்தராத்துக்கு வேலை செய்வதாக நீதிமன்ற வளாகத்தில் வைத்து அமித் தெரிவித்திருந்த அதே வேளை பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

திகன வன்முறையைத் தூண்டுவதில் கண்டி பொலிஸ் உயர் மட்டத்திற்கும் பங்கிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே தம்மைப் பிடித்துப் போட்ட தற்போதைய பொலிசார் கொந்தராத்து காரர்கள் என அமித் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment