35,000 செலவு செய்து ரணில் 'மேக்-அப்' போடுவதில்லை: நலின் - sonakar.com

Post Top Ad

Wednesday, 4 April 2018

35,000 செலவு செய்து ரணில் 'மேக்-அப்' போடுவதில்லை: நலின்தனது வயதை மறைப்பதற்கோ அலங்காரம் செய்து கொள்வதற்கோ எந்த முயற்சியும் செய்யாத தமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க நரை முடியுடன் இயற்கையாகவே வாழ்ந்து வருவதாகவும் கூட்டு எதிர்க்கட்சி முன் வரிசையில் உள்ள 60 வயதைத் தாண்டிய பலர் மேக் அப்புக்கு மாத்திரம் 35,000 ரூபாவுக்கு அதிகமாக செலவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார் நா.உ நலின் பண்டார.70வயதைத் தாண்டியும் கூட்டு எதிர்க்கட்சியினரின் தலைவர்கள் தம்மை அலங்கரிப்பதற்கும் நரைமுடியை மறைப்பதற்கும் பெரும் முயற்சி செய்து வருவதோடு தமது மனைவியரையும் இளமையாகக் காட்ட பெருமளவில் செலவு செய்வதாகவும் தனது நாடாளுமன்ற உரையின் போது நலின் தெரிவித்திருந்தார்.

இதேவேளை தமது கட்சித் தலைவரோ அவரது மனைவியோ அவ்வாறு அலங்காரத்தின் பின் அலைவதில்லையெனவும் அங்கு அவர் பிரஸ்தாபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment