
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு செயலாளர் மஹிந்த அமரவீரவையும் நீக்குமாறு அண்மையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்த 16 பேர் கொண்ட குழு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த குழுவினரை மஹிந்த அணி தம் பக்கம் இழுக்க முயற்சிக்கின்ற அதேவேளை, ஜனாதிபதிக்கு குறித்த குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதேவேளை, இவர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தமது கட்சிகளின் செயலாளர்களைக் குறை காணும் குறித்த குழுவினர் அவர்களை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரு கட்சிகளுக்கும் ஜனாதிபதியே தலைவர் என்பதோடு வாக்களித்தவர்களும் தவிர்ந்து கொண்டவர்களும் தாம் கட்சித் தலைமையின் உத்தரவுக்கிணங்கவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment