அமைச்சரவைக் கூட்டம்: குரூப் 16 உறுப்பினர்களும் பங்கேற்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 April 2018

அமைச்சரவைக் கூட்டம்: குரூப் 16 உறுப்பினர்களும் பங்கேற்பு!


கடந்த அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணித்து, தாம் விலகிக் கொள்வதாக அறிவித்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரூப் 16 உறுப்பினர்கள் சிலரும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.


தயாசிறி ஜயசேகர, டிலான் பெரேரா, எஸ்.பி திசாநாயக்க போன்றோர் ரணிலுக்கு எதிரான நிலைப்பாட்டைப் பகிரங்கமாக அறிவித்து 16 பேரும் கூட்டு எதிர்க்கட்சியுடன் சேர்ந்து கொள்ளப் போவதாக தெரிவித்து வருகின்ற நிலையில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், அமைச்சுப் பொறுப்புகள் சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும் எனவும் புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படும் எனவும், விஞ்ஞானபூர்வமாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க மற்றும் பிரதியமைச்சு பதவிகளை வகித்த மூவரே மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் இணைந்துள்ளனர்.

No comments:

Post a Comment