அந்த '16' பேரும் எங்களோடு இணைவார்கள்: மஹிந்த நம்பிக்கை! - sonakar.com

Post Top Ad

Wednesday 11 April 2018

அந்த '16' பேரும் எங்களோடு இணைவார்கள்: மஹிந்த நம்பிக்கை!


நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சிப் பக்கம் அமர்வார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.சு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒரு பகுதியினர் பிரேரணையை ஆதரித்த அதேவேளை இன்னொரு பகுதியினர் வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்டிருந்தனர். எனினும் இரு தரப்பும் கட்சித் தலைமையின் முடிவின் பிரகாரமே இயங்கியதாகவும் தெரிவிக்கிறது.

இந்நிலையில், நிமல் சிறிபாலவை தற்காலிகமாக முன்நிறுத்தி மூன்று மாதங்களில் பிரதமர் பதவியைக் கைப்பற்றும் மஹிந்தவின் திட்டத்தை உணர்ந்து கொண்டதன் பிற்பாடே சு.கவில் இவ்வாறு நிலை மாற்றம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் குரூப் 16 எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளும் என தற்போது மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment