
12 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் பட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தமக்குக் கிடைக்கப் பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள் புழக்கம் குறித்து வர்த்தகர்கள் அவதானமாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment