
ஏப்ரல் 4ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் அப்பதவிக்கு தற்போது போட்டி ஆரம்பித்துள்ளது.
ஏலவே உள்ளூராட்சித் தேர்தல் முடிவையடுத்து தனது பதவியேற்புக்குத் தயாராகும்படி நிமல் சிறிபால டிசில்வா அறைகூறவல் விடுத்திருந்த நிலையில் தற்போது எஸ்.பி. திசாநாயக்க மற்றும் அநுர யாப்பா பிரதமர் பதவியைக் குறி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தலைவர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் கையொப்பமிட்டுள்ள அதேவேளை வாக்கெடுப்பு வேளையில் 'அதிர்ச்சி' காத்திருப்பதாக மஹிந்த அணி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment