கல்முனையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Sunday 25 March 2018

கல்முனையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வு

பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடராகச் செய்துவரும் செஸ்டோ அமைப்பு, 2018-03-25 ஆம் திகதி தலைவர் ஏ.எச்.எம்.றிஷான் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றினை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நடாத்தியது.

இது கல்முனை சாஹிராக் கல்லூரியில் 99 ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர்களை உள்ளடக்கிய  ”செஸ்டோ” ZESDO (Zairians’  Education & Social Development Organization) என்ற பெயரில் பிரதேசத்தின் பிரபல்யமான அமைப்பாகும்.

இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்தியர்களான எம்.ரீ.என்.சிபாயா மற்றும் கே.வித்யா ஆகியோரது மேற்பார்வையில் இடம்பெற்ற குறித்த முகாமில்  "செஸ்டோ" அமைப்பின் நடப்பாண்டு செயலாளர் எம்.ஏ.எம்.எம்.சிராஜ், பொருளாளர் எஸ்.எச்.எம்.அஸ்மி, அமைப்பில் உறுப்பினரும் கல்முனை மாநகரசபையின் உறுப்பினருமான என்.எம்.றிஸ்மிர் மற்றும் எம்.சி.எம்.கமருன் ரிலா, ஏ.எச்.எம்.நளீம் ,ஆரிஸ் அக்பர், ஏ.எம்.எம்.றிபாஸ், ஏ.எம்.றாஜுடீன், ஏ.எம்.றியாஸ் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்களும் நல்லுள்ளம் கொண்ட அநேக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களது இரத்தங்களை தானம் செய்தனர்.

-எம்.வை.அமீர்

No comments:

Post a Comment