
கண்டியில் இடம்பெற்ற வன்முறையில் அரசின் எந்த அமைச்சருக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
மஹிந்த அணியின் பலரது பெயர்களை நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் வைத்து குறிப்பிட்டிருந்த அமைச்சர் ராஜித, அரச தரப்பிலிருந்து எந்தவித தொடர்புமில்லையென தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளே வன்முறை பரவுவதற்குக் காரணம் என தற்போது தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வன்முறைகளின் பின்னணியில் 314 பேர் கைது செய்யப்பட்டதுடன் அதில் 205 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment