முஸ்லிம்களையும் 'பொதுச் சட்டத்துக்குள்' கொண்டு வர வேண்டும்: ஒமல்பே சோபித தேரர் - sonakar.com

Post Top Ad

Wednesday 21 March 2018

முஸ்லிம்களையும் 'பொதுச் சட்டத்துக்குள்' கொண்டு வர வேண்டும்: ஒமல்பே சோபித தேரர்நாட்டில் இனங்களுக்கிடையில் நிலவும் கலவர சூழ்நிலையைத் தணிப்பதற்கு அனைத்தினங்களும் ஒரே பொதுச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் ஒமல்பே சோபித தேரர்.

முஸ்லிம்கள் பொதுச் சட்டத்துக்குப் புறம்பாக தமக்கென பிரத்யேகமான ஷரியா சட்டத்தைப் பின்பற்றுவதாகவே பெரும்பாலான சிங்கள மக்கள் எண்ணிக்கொண்டிருப்பதாகவும் விவாக, விவாகரத்து விவகாரங்களுக்கு தனியான நீதிமன்றம், தனிப் பாடசாலைகள் விசேட சலுகைகள் என முஸ்லிம் சமூகம் வேறு விதமாக 'கவனிக்கப்படுகின்றமை' சிங்கள மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


தனிச் சிங்கள பாடசாலை என்று எதுவும் இல்லையெனினும் முஸ்லிம்கள் தனியான பாடசாலைகளை நடாத்துவதாகவும் அங்கு ஏனைய இனங்களைச் சேர்ந்தவர்கள் சேரவும் முடியாது எனவும் தெரிவிக்கின்ற அவர்,  முஸ்லிம்கள் பொதுவான சட்ட விதிகளுக்குட்படாத சமூகமாகக் திகழ்வதனாலேயே முறுகல்கள் அதிகரித்துள்ளதாகவும் விரிசல்கள் உருவாகி வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment