தலைமைப் பதவியில் மாற்றம் வருமா? கபீர் ஹாஷிம் விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Friday, 30 March 2018

தலைமைப் பதவியில் மாற்றம் வருமா? கபீர் ஹாஷிம் விளக்கம்!
ஏப்ரல் 4ம் திகதியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தலைமைப் பதவியும் 'யாருக்கும்' நிரந்தரமாய் எழுதிக் கொடுக்கப்பட்டதில்லையென தெரிவிக்கிறார் கட்சியின் செயலாளர் கபீர் ஹாஷிம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி ஒரு போதும் குடும்ப உறுப்பினர்களுக்குள் கை மாற்றப்பட்டதோ இல்லை எழுதிக் கொடுக்கப்பட்டதோ இல்லையென தெரிவிக்கும் அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு கட்சியின் கொள்கைகள் இருந்தது எனவும் தெரிவிக்கிறார்.இதேவேளை, பெரும்பாலும் அனைத்து பதவிகளிலும் மாற்றம் வரும் எனவும் கட்சி மட்டத்தில் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment