ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவளிக்கும் என மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளார் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி.
இன்று முன் வைக்கப்பட்டிருக்கும் 14 குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக தமது தரப்பில் மேலும் பல சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் இருப்பதாகவும் அவற்றின் அடிப்படையில் ஆதரவளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவினால் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்று மதியம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment