
ஜனநாயக போராளியென போற்றப்பட்டு பல்வேறு விருதுகள், கௌரவங்களைப் பெற்றிருந்த ஆங் சூ கீ, ஆட்சியதிகாரத்தைப் பெற்ற பின் முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பைக் கட்டுப்படுத்தத் தவறிய நிலையில் சர்வதேச ரீதியில் வழங்கப்பட்ட பல்வேறு கௌரவங்களை இழந்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியில் 2012ம் ஆண்டு அமெரிக்காவில் வழங்கப்பட்ட மனிதநேயத்துக்கான உயர் விருதினை அமெரிக்க ஹோலோகொஸ்ட் அருங்காட்சியகம் மீளப்பெற்றுள்ளது.
எனினும், தவறான புரிதலால் இவ்வாறு இடம்பெற்றுள்ளதாகவும் வருத்தத்துக்குரியதாகவும் மியன்மார் அரசு தெரிவிக்கின்றமையும் கடந்த செப்டம்பர் முதல் இவ்வாறு பல்வேறு சர்வதேச விருதுகளையும் கௌரவத்தையம் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment