அஷ்ரஃபின் மரண விசாரணை அறிக்கை பிரதி ஒப்படைப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 1 March 2018

அஷ்ரஃபின் மரண விசாரணை அறிக்கை பிரதி ஒப்படைப்பு


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கையின் பிரதி, தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜனாதிபதி செயலகத்திடம் வழங்கியிருந்த அறிக்கையை ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் லக்ஸ்மி ஜயவிக்ரம கடந்த 27ம் திகதி ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையை கோரி தகவல் அறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் நான்காவது விசாரணை அமர்வு நேற்று இடம்பெற்றது.


அஷ்ரஃப் மரண விசாரணை அறிக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப்படை ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதியையாவது பெற்றுத்தருமாறும் தகவல் அறியும் ஆணைக்குழுவின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ரோஹினி வெல்கம கடந்த அமர்வின் போது சுவடிகள் திணைக்களத்திற்கு கூறியிருந்தார்.
அதன்படி, அறிக்கையை வழங்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் ஒன்றின் மூலம் கோரியிருந்தார்.

பின்னர் கடந்த 14 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அந்த அறிக்கையை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பியுள்ளது.

-Ithrees Seeni Mohammed


No comments:

Post a Comment