
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சர் கயந்த கருணாதிலக்க.
ஐக்கிய தேசிய முன்னணி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரிப்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் முன்னர் எதிர்ப்புக் குரல் வெளியிட்ட பாலித ரங்கே பண்டார மற்றும் வசந்த சேனாநாயக்கவும் இதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் கையொப்பமிட்டுள்ளதுடன் மேலும் சிலர் வாக்களிப்பின் போது ஆதரவளிக்கவுள்ளதாக நேற்றைய தினம் அமைச்சர் தயாசிறி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment