அமித் வீரசிங்கவின் 'பின்புலத்தை' மூடி மறைக்க முஸ்தீபு! - sonakar.com

Post Top Ad

Sunday 18 March 2018

அமித் வீரசிங்கவின் 'பின்புலத்தை' மூடி மறைக்க முஸ்தீபு!


திகன, தெல்தெனிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிட்டு கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களின் பொருளாதாரம் மற்றும் உடமைகளுக்குப் பாரிய சேதங்களை விளைவித்த சம்பவத்தின் சூத்திரதாரியாக செயற்பட்ட அமித் வீரசிங்கவின் பின்புலம் பற்றி அண்மைக்காலமாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனடிப்படையில் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கும் குறித்த நபரை முன்நிறுத்தி உருவாக்கப்பட்ட அமைப்புக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆதலால், கண்டி மாவட்டத்தில் பணியாற்றிய பல பொலிஸ் உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவ்வாறு எந்த நடவடிக்கையும் இது வரை இடம்பெறவில்லையென உறுதி செய்துள்ளார் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர.


இந்நிலையில், அவசரகால சட்டத்தின் கீழ் கைதான அமித் வீரசிங்க சாதாரண தண்டனைச் சட்டத்தின் கீழே விசாரிக்கப்படவுள்ளதோடு பொலிசார் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் இடமாற்றங்களோ மீள் அழைப்புகளோ தவிர்க்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அமித் வீரசிங்கவினால் இயக்கப்பட்ட மஹசோன் பலகாயவின் பின்புலத்தை மூடி மறைப்பதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்று வருவதாக தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment