கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து பொருளாதார அழிவை ஏற்படுத்த நீண்டகாலமாக திட்டமிட்டு வந்த இனவாதி அமித் வீரசிங்க, அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் தமது சகாக்கள் பத்துப்பேருடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர்களது விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த குழுவினர் சாதாரண குற்றவியல் தன்டணைக்குக் கீழே விசாரிக்கப்படுவர் என ஒரு கட்டத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது இரண்டாவது தடவையாக குறித்த நபர்களது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவங்களைத் தூண்டியதில் பிரதேச பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment