கண்டி: வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை - sonakar.com

Post Top Ad

Sunday, 18 March 2018

கண்டி: வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறைகண்டி மாவட்டத்தில் இடம் பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து பாரிய வீழ்ச்சியடைந்த சுற்றுலாத் துறையை பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கா தெரிவித்தார்.

கண்டி சுற்றுலா ஹோட்டல் சங்கம் மற்றும் சுற்றுலாத் துறை  பணிப்பாளர்கள் உற்பட சுற்றுலா விடுதிகளுடன் தொடர்புடைய நிறுவனத் தலைவர்களால் நடத்தப்பட்ட  செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.


எதிர் பாராத அளவு சுற்றுலாத் துறை திடீர் வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகவும் ஆனால் நிலைமைகள் சீராகி உள்ளதால் உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலாத்துறையினர் கண்டிக்கு பயமின்றி வருகை தரமுடியும் என்றும் அவர் கூறினார்.  -ஜே.எம். ஹாபிஸ்


No comments:

Post a Comment