ஒற்றுமையை வலியுறுத்தி நிற்கும் அம்பாறை நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Thursday, 1 March 2018

ஒற்றுமையை வலியுறுத்தி நிற்கும் அம்பாறை நிகழ்வு


அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல், வர்த்தக நிலையம் மற்றும் சூழவுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட இனவாத செயற்பாடானது திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை நாம் உணர்ந்து கொள்ளாமல் இல்லை.


இலங்கை வாழ் முஸ்லிம்கள் செறிவாக வாழும் மாவட்டமாகவும், அது ஒட்டுமொத்த சமூகத்தின் அரண் எனவும் பார்க்கப்பட்டுவரும் அம்பாறையில் நடத்தப்பட்ட இச்செயல்கண்டு எந்த முஸ்லிமின் சதுரம் துடிக்காமல் இராது.

இதுபோன்ற சம்பவங்கள் கடந்த ஐந்து வருடங்களாக நாட்டில் பல பாகங்களிலும் அரங்கேற்றப்பட்டு வருகின்றமைக்கு எதிராக நாம் என்ன தீர்வை முன்வைத்து வருகிறோம் என்பதை இன்னும் கட்டமைக்கவில்லை.


தவிர சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கொண்டு எமக்குள் இறுகிக் கிடக்கும் பிரிவினைகளை மீண்டும் மீண்டும் பழிதீர்ககும் செயற்பாடுகளில் மாத்திரமே ஈடுபட்டு வருகிறோம்.

நம்முள் புதிதாக முளைவிடுகின்ற அரசியல் பேதங்கள், ஆண்மீக பிரிவினைகள், பிரதேச வாதம் உட்பட ஏனைய குழுக்கள் எதுவும் முஸ்லிம் தேசியம் என்ற எமது பாதுகாப்பு குறித்து சிந்திக்காது எம்மை மேலும் பலமுழக்கச் செய்து வருகின்றது.

எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளை மாத்திரம் தோலுரிக்க விளையும்  சமூகவாதிகள்!சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், சமயப் பிரமுகர்கள், சமூக சேவையாளர்கள், இளைஞர்கள், சிரேஷ்ட பிரஜைகள், ஊடகவியலாளர்கள் போன்ற அனைத்து பொறுப்புமிக்கவர்களும் ஒன்றிணைந்து சமூகம் பற்றிய இருப்பு பற்றி பேசியுள்ளோமா என மனட்சாட்சியுயை ஒருகணம் கேட்டு பார்ப்போம்.

இவைகள் தவிர முஸ்லிம் தேசியம் பாதுகாக்கப்பட நான் அனைத்து பிரிவுகளையும் தூர வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டியது மாத்திரமே சமூகம் வேண்டிநிற்கும் ஒன்று.

sஎனவே பூனைக்கு மணி கட்டுவது யார் என தூரமாகாமல் நாம் சமூகத்தின் ஒற்றுமையின் ஊடாக எதிர்கால சந்ததியினரின் இருப்பை உறுதி செய்து கொள்ள ஒன்றுபடுவோம்.

ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்

No comments:

Post a Comment