ஒருவரிடமும் 'தெளிவான' முடிவில்லை: விஜேதாச - sonakar.com

Post Top Ad

Saturday, 31 March 2018

ஒருவரிடமும் 'தெளிவான' முடிவில்லை: விஜேதாச


ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அதற்கு மாற்றீடாக யாரை பிரதமராக நியமிக்கப் போகிறார்கள் என்பதில் கூட்டு எதிர்க்கட்சியிடமோ நம்பிக்கையில்லா பிரேரணையை வென்ற பின் அரசியல் சூழ்நிலையை எவ்வாறு கையாளப்போகிறார்கள் என்பதில் ஐக்கிய தேசியக் கட்சியிடமோ எந்தவித தெளிவும் இல்லையென தெரிவிக்கிறார் விஜேதாச ராஜபக்ச.

நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்தாலும் நாட்டின் அரசியலில் தேவைப்படும் மாற்றத்தை எவ்வாறு உருவாக்கப் போகிறார்கள், எவ்விதமான மாற்றீடு உள்ளது போன்ற விடயங்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் எந்தத் திட்டத்தையும் முன் வைக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இன்றைய தினத்துக்குள் தமது கட்சி நிர்வாக மட்டத்தில் பாரிய மாற்றத்தை அறிவிக்கப் போவதாக தெரிவித்திருந்த போதிலும் ஏப்ரல் 4ம் திகதிக்குப் பின்னரே அவ்வறிவிப்பு வெளியாகும் என ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment