சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி; புதிய மாணவிகள் அனுமதி - sonakar.com

Post Top Ad

Tuesday 20 March 2018

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி; புதிய மாணவிகள் அனுமதி



சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் புதிய கல்வியாண்டுக்கான மாணவிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அல்-குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த, ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவிகள் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்படுகிறது.

இது குறித்து கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி மேலும் தெரிவிக்கையில்;

இக்கல்லூரியில் மௌலவியா, அல் ஆலிம் மற்றும் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைகளுக்கு மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். இங்கு பயிலும் மாணவிகள் மூன்றாம் வருடத்தில் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன் நான்காம் வருடத்தில் அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றி  மௌலவியாக்களாக, தாயியாக்களாக வெளியேறுகின்றனர்.


கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய எமது மாணவிகள் அனைவரும் எல்லா பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்றனர். அத்துடன் அரசாங்க அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவிகளும் சித்தியi;டந்துள்ளனர். எமது கல்லுரியிலிருந்து இது வரை இரண்டு பிரிவு மாணவிகள் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர். 

இக்கல்லுரியில் சேர விரும்பும் மாணவிகள் கல்லுரி அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று எதிர்வரும் 12-04-2018 ஆம் திகதிக்கு முன்னர்  விண்ணப்பிக்குமாறு கேட்கப்படுகின்றனர். தெரிவுக்கான நேர்முகப்பரிட்சை 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும்" என்று குறிப்பிட்டார்.

-அஸ்லம் எஸ்.மௌலானா

No comments:

Post a Comment