அம்பாறை சம்பவம்; ஐவர் பொலிசில் சரண்! - sonakar.com

Post Top Ad

Thursday, 1 March 2018

அம்பாறை சம்பவம்; ஐவர் பொலிசில் சரண்!


அம்பாறையில் திங்களிரவு அரங்கேற்றப்பட்ட இனவாத வன்முறையின் பின்னணியில் நேற்றிரவு ஐவர் பொலிசில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.

இதேவேளை, மேலும் ஐவர் இன்று சரணடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் இடம்பெற்ற மறுநாள் ஆகக்குறைந்தது பத்துப் பேரை கைது செய்யப் போவதாக பொலிசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே நேற்றிரவு இவ்வாறு ஐவர் சரணடைந்துள்ளதுடன் மேலும் ஐவரது சரண் இன்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் சர்ச்சைக்குள்ளான கடையின் உரிமையாளர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டு மறுநாள் வரை தடுக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை அங்கு வந்து நேரடியாகப் பார்வையிடப் போகிறார் என முஸ்லிம் காங்கிரசினர் தகவல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment