ரஷ்யா: தீ விபத்தில் 53 பேர் பலி! - sonakar.com

Post Top Ad

Monday 26 March 2018

ரஷ்யா: தீ விபத்தில் 53 பேர் பலி!


ரஷ்யா, கெமரவ் பகுதியில் பிரபல வர்த்தக கட்டிடத் தொகுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தொன்றில் சுமார் 41 குழந்தைகள் உட்பட 53 பேர் பலியாகியுள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரையரங்கு மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளடங்களான குறித்த கட்டிடத்தின் முதலாவது மாடியில் ஆரம்பித்த தீ விரைவாகப் பரவியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


சுமார் 17 மணித்தியால போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment