அம்பாறை பள்ளிவாசல் துப்பரவு பணி மும்முரம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 February 2018

அம்பாறை பள்ளிவாசல் துப்பரவு பணி மும்முரம்இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட அம்பாறை ஜும்மா பள்ளிவாசலில் துப்புரவு பணிகள் மும்முரமாக இடம்பெற்றுள்ளது.


முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான உணவகத்தில் ஏற்பட்ட சர்ச்சையை இனவாதமாக மாற்றி பள்ளிவாசல் மற்றும் வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருந்தன.சட்ட, ஒழுங்கு அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கும் நிலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது அருகில் அமைந்துள் பொலிஸ் நிலைய அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக துப்பரவு பணிகள் இடம்பெற்றுள்ளதுடன் விரைவில் அன்றாட வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் ஆயத்தங்களும் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை, எதிர்வரும் சனிக்கிழமை ரணில் அம்பாறை விஜயம் செய்யப் போவதாக பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவிக்கின்றமையும் அவரும் இனவாதிகளால் அம்பாறையிலிருந்து விரட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment