மீராவோடை தாருஸ்ஸலாம் மஸ்ஜித் மின் மானி வெடித்து சேதம் - sonakar.com

Post Top Ad

Tuesday 27 February 2018

மீராவோடை தாருஸ்ஸலாம் மஸ்ஜித் மின் மானி வெடித்து சேதம்
மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியிலுள்ள தாருஸ்ஸலாம் ஜும்ஆ மஸ்ஜிதில் நேற்றிரவு திடீரென்று ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணத்தால் பள்ளிவாயலின் மின் மானி வெடித்து சேதமடைந்துள்ளது.


திடீரென்று மின் மானி வெடித்து தீப்பற்றி எரிந்ததைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

குறித்த மின் ஒழுக்கு பற்றி உடனடியாக வாழைச்சேனை மின்சார சபைக்கு தெரிவித்து மின் இணைப்பு சீர்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment