அட்டாளைச்சேனை: வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு - sonakar.com

Post Top Ad

Monday 28 December 2015

அட்டாளைச்சேனை: வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு


அட்டாளைச்சேனை மறுமலர்ச்சி நிறுவனத்தின் 18வது ஆண்டு நிறைவையொட்டி அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல் மற்றும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் அண்மையில் ஒஸ்ரா மெடிக்கல் நிறுவனத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.


மறுமலர்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ஏ.எல் றமீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் கௌரவ அதிதியாகவும், விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம் காசீம், உதவிப்பிரதேச செயலாளர் ரீ.ஜே அதிசயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் கடந்த காலங்களில் அட்டாளைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த சாதனையாளர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில்  கலந்துகொண்ட அட்டாளைச்சேனை பிரதேச ஊடகவயலாளர்கள் 20 பேருக்கு நீரிழிவு நோய் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டதுடன் ஒஸ்ரா மெடிக்கல் நிறுவனத்தினால் பேக்(டீயப) ஒன்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

-றியாஸ் ஆதம்

No comments:

Post a Comment