பறகஹதெனிய A/L மாணவனின் திறமை - sonakar.com

Post Top Ad

Tuesday 29 December 2015

பறகஹதெனிய A/L மாணவனின் திறமை

கால நேரங்களை வீணடிப்புச் செய்யாமல்  சரியாகச் சிந்தித்து தம்முடைய ஆக்கத்திறனை வெளிக் கொணர்தலின் மூலம் தன்னுடைய திறனை பதிவு செய்துள்ளார் பறகஹதெனிய தேசிய பாடசாலையில் க. பொ. த. உயர் தரப் பிரிவில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் மாணவன் முஹமட் இல்ஹாம் என்ற மாணவன்.


தாமரையின் தண்டு நீள்வது குளத்தில் உள்ள தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார் வள்ளுவர்.  உள்ளத்தில் அடங்கியிருக்கும் எண்ணத்தின் ஆற்றல் எந்தளவு உந்தித் தள்ளுமோ அந்த அளவுவுக்கு வெற்றியும் அமைந்திருக்கும். அந்த வகையில் பறகஹதெனியவையைச் சேர்ந்த இல்ஹாம் நான்கு சக்கர வண்டி ஒன்றைச் செய்து வெற்றி கண்டுள்ளார்.

இவர் தம் வீட்டில் இருந்த பழைய இரும்புக் கம்பிகள், மோட்டார் சைக்கிலுள்ள பழைய  இன்ஜின் , எக்ஸ்லேட்டர், வில்பிரோவின் சக்கரங்கள்  ஆகியவற்றைக் கொண்டு ஒரு நான்கு சக்கர வண்டியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார். இதைத் தயாரிப்பதற்கு   இருவாரம் அவருக்கு எடுத்ததுள்ளது.  குறைந்தளவு செலவில் இது செய்து முடிக்கப்பட்டுள்ளது.


இந்த நான்கு சக்கர வண்டியின் மூலம் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும் தமது அன்றாட  போக்குவரத்து தேவைகளுக்கும், அங்கவீனர் பயன்படுத்தக் கூடியதாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.


இந்த நான்கு சக்கர வண்டியை இணையத்தளத்தின் உதவியைக் கொண்டே தான் தயாரித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். மனிதனின் எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன. இல்ஹாம் தனக்கு கிடைத்த நேர காலத்தை விணாக்காமல் தான் வெற்றி பெற வேண்டும் என்ற தீராத தணியாத அவலின் கனியாக நான்கு சக்கர வண்டி உருவாக்கியுள்ளார்.  அவரது பணி தொடர எமது வாழத்துக்கள் உரித்தாகுக.

-இக்பால் அலி

1 comment:

Unknown said...

வாழ்த்துகள்

Post a Comment