முஸ்லிம் நாடுகளிடம் நேரடியாக 'உதவி' கோரிய பிரதமர் - sonakar.com

Post Top Ad

Thursday 2 December 2021

முஸ்லிம் நாடுகளிடம் நேரடியாக 'உதவி' கோரிய பிரதமர்

 


முஸ்லிம் நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதிகளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட விருந்துபசாரம் வழங்கி நாட்டின் அபிவிருத்திக்கு உதவுமாறு நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்து உரையாற்றிய பிரதமர், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்பை 'தொடர்ச்சியாக' எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.


ஓமான், பலஸ்தீன், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, கடார், துருக்கி, ஈரான், லிபியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் மாலைதீவு, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாடுகளின் இலங்கை உயர் ஸ்தானிகர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment