வை.எம். ஹனீபா மரணம்: ரவூப் ஹக்கீம் அனுதாபம் - sonakar.com

Post Top Ad

Tuesday 30 March 2021

வை.எம். ஹனீபா மரணம்: ரவூப் ஹக்கீம் அனுதாபம்

 


சாய்ந்தமருது –மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் வை.எம். ஹனீபா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தேன். தனது முதுமை நிலையிலும் சமூகம் சார்ந்த பொது விடயங்களில், உற்சாகத்துடன் சமூகத்தை வழிநடாத்திக்கொண்டிருந்தவரே வை.எம். ஹனீபா என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவரும் மூத்த கல்விமானுமான வை.எம். ஹனீபா (ஹனீபா மாஸ்டர்) அவர்களின் மறைவையிட்டு விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:


ஆசிரியராக கல்விச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட வை.எம். ஹனீபா, பின்னர் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் பிரதி அதிபராக நியமனம் பெற்று பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சிக்கு தன்னாலான அனைத்து பங்களிப்புகளையும் செய்தார். அதன்பின், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.எம். மன்சூரின் இணைப்பாளராக இருந்து, சகல பிரதேசங்களுக்கும் அபிவிருத்திகளை கொண்டுசெல்வதில் அரும்பணியாற்றினார்.


அதிக சமூகப்பற்று கொண்ட இவர், குடும்பம் மற்றும் சமூக மட்டங்களில் ஏற்படுகின்ற பல பிணக்குகளை தீர்த்துவைத்திருக்கின்றார். தனது அந்திம காலத்தில்கூட எல்லோரையும் போல வீட்டுக்குள் முடங்கிவிடமால், சமூகம் சார்ந்த பொது விடயங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவந்த நிலையில் தனது 86ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், ஊர்மக்கள் அனைவருக்கும் அவரது பிரிவை தாங்கும் மனவலிமையை இறைவன் கொடுக்க வேண்டும். அன்னாரின் மறுமை வாழ்வுக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.


 

No comments:

Post a Comment