கட்டாருடனான 'உறவை' மீள ஆரம்பிக்கும் UAE - sonakar.com

Post Top Ad

Thursday 7 January 2021

கட்டாருடனான 'உறவை' மீள ஆரம்பிக்கும் UAE

 


சவுதி அரேபியாவையடுத்து கட்டாருடனான உறவுகளைப் புதுப்பிப்பதற்கு ஐக்கிய அரபு அமீரகமும் தயாராகி வருகிறது. இப்பின்னணியில் அடுத்த வாரம் எல்லைகளைத் திறப்பதோடு வர்த்தக நடவடிக்கைகளையும் மீள ஆரம்பிக்கவுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுகளுக்கான ராஜாங்க அமைச்சர் அன்வர் முஹம்மத் தகவல் வெளியிட்டுள்ளார்.


மூன்றரை வருடங்களுக்குப் பின் வளைகுடா நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பின் மாநாட்டுக்கு கட்டார் அழைக்கப்பட்டிருந்த அதேவேளை அங்கு வைத்து கட்டார் அமீரினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளைத் தாம் முழுமையாக நம்புவதாக அமீரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலைமையை ஆராய்ந்து தாமும் முடிவெடுக்கவுள்ளதாக எகிப்தும் தெரிவிக்கின்ற அதேவேளை, ஈரானுடனான கட்டாரின் உறவின் பின்னணியில் வளைகுடா நாடுகள் கட்டாருக்கு எதிரான நிலைப்பாட்டையெடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment