கிண்ணியா: மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம்! - sonakar.com

Post Top Ad

Sunday 27 December 2020

கிண்ணியா: மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம்!

 


சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்த ஜனாஸா எரிப்புக்கான எதிர்ப்புப் போராட்டம்  கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள மையவாடிக்கு முன்னால் இன்று கொட்டும்  மழைக்கும்  மத்தியில் (27) ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது


இதில் சிவில் அமைப்புகளான விவசாய சம்மேளனம்,  உலமா சபை. மற்றும் சூறா சபை, அனைத்து பள்ளிவாயல்களின் சம்மேளனம் , வர்த்தக சம்மேளனம் மீனவர்கள் சங்கங்கள், மற்றும் சட்டத்தரணிகள் உதைபந்தாட்ட வீரர்கள் உட்பட பல அமைப்புகள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையை மேற் கொண்டனர்.


இந் நடவடிக்கையின் பின்பு ஜனாஸா எரிப்புக்கு எதிராக பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி அவர்களிடம் மகஜர்  ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் சமயத் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்தனர்.


கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்னாலுள்ள மையவாடியில் கபன் சீலை கட்டி வைத்துள்ளதோடு , பதாதைகளும்  ஒட்டப்பட்டு ஜனாசா எரிப்புக்கு எதிராக கோஷங்களை  இடம் பெற்றது.


ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கை முடிந்த பின் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட  பாதைகளையும், கபன் துணிசளையும் பொலிஸார் அகற்றிச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.


-எம்.முகமட்

No comments:

Post a Comment