கார்டூன் சர்ச்சை: பிரான்சில் ஆசிரியர் தலை துண்டித்துக் கொலை - sonakar.com

Post Top Ad

Saturday 17 October 2020

கார்டூன் சர்ச்சை: பிரான்சில் ஆசிரியர் தலை துண்டித்துக் கொலை


கருத்துச் சுதந்திரம் பற்றிய பாடம் நடாத்துகையில் முன்னர் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய, பிரான்ஸ் பத்திரிகையொன்றினால் வெளியிடப்பட்டிருந்த முஹமத் நபி (ஸல்) அவர்கள் தொடர்பான கேலிச் சித்திரங்களை முன் வைத்து விரிவுரை நடாத்தி வந்த ஆசிரியர் ஒருவர் நேற்று மாலை பரிஸ் நகரில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


தனது வகுப்பு நேரங்களில் அசௌகரியமாகக் கருதும் முஸ்லிம் மாணவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தி, தொடர்ச்சியாக குறித்த கேலிச் சித்திரங்களை பிரசுரித்த பத்திரிகை தொடர்பான விபரங்களை அவர் பேசி வந்துள்ள நிலையில் பல பெற்றோர் பாடசாலையில் முறைப்பாடு செய்துள்ளனர்.


இந்நிலையிலேயே, நேற்று இவ்வாறு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் கொலையாளியென சந்தேகிக்கப்படும் நபர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் இதுவரை ஒன்பது பேர் மேலதிகமாக கைது செய்யப்பட்டு விசாரணை நடாத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த சம்பவத்தை 'பயங்கரவாத நடவடிக்கை'யென வர்ணித்துள்ள பிரான்ஸ் அதிபர், தக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment