ஈஸ்டர் தாக்குதல்: ரிசாத் பதியுதீனிடம் 9 மணி நேர விசாரணை - sonakar.com

Post Top Ad

Thursday 9 July 2020

ஈஸ்டர் தாக்குதல்: ரிசாத் பதியுதீனிடம் 9 மணி நேர விசாரணை


ஈஸ்டர் தாக்குதல்கள் விவகாரம் தொடர்பில் இன்று அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் 9 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை இடம்பெற்றுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரிசாத் பதியுதீன்,  என்னைப் பொறுத்தவரையில் நான் நிரபராதி. சஹ்ரானை என் வாழ்நாளில் கண்டதே இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் எந்தவொரு செயற்பாட்டிலும் எனக்கு துளியளவும் தொடர்புமில்லை. நான் பயங்கரவாதத்தை முற்றாக வெறுப்பவன். என்னையும் எனது சகோதரர்களையும் அநியாயமாக, வேண்டுமென்றே இந்தச் சம்பவத்துடன் தொடர்புபடுத்துகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் சட்டத்தரணிகள் ஊடாக விளக்கமளித்து வருவதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment