மது போதை சாரதிகளை 'பிடிக்க' விசேட இரவு நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Thursday, 18 June 2020

மது போதை சாரதிகளை 'பிடிக்க' விசேட இரவு நடவடிக்கை


மது போதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்வதற்கான விசேட இரவு நேர நடவடிக்கையை மறு அறிவித்தல் வரை மேற்கொள்ளப் போவதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளதாகவும் அது மறு அறிவித்தல் வரை தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலமாக பெரும்பாலான வாகன விபத்துகளுக்கு மது போதையில் வாகனம் செலுத்துவதே காரணம் என்பதால் இவ்விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment