தேர்தல் வெற்றியோடு சிறிகொத்தாவைக் கைப்பற்றுவோம்: சஜித் - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 June 2020

தேர்தல் வெற்றியோடு சிறிகொத்தாவைக் கைப்பற்றுவோம்: சஜித்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தா தமது கட்டுப்பாட்டுக்குள் வரும் என தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.

பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள அவர், ஜனாதிபதி தேர்தலின் போது தாம் 154 பொதுக் கூட்டங்களை நடாத்தியதாகவும் இம்முறை 1000 கூட்டங்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் கம்பஹாவில் வைத்து தெரிவித்துள்ளார்.

தான் வெற்றி பெற்றதும் புதிய அரசொன்று அமையும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment