UK: ஒரே நாளில் 938; மொத்தம் 7097 கொரோனா மரணம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 April 2020

UK: ஒரே நாளில் 938; மொத்தம் 7097 கொரோனா மரணம்!


ஐக்கிய இராச்சியத்தில் ஒரே நாளில் 938 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ள அதேவேளை மொத்தமாக இதுவரை 7097 பேர் மரணித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஐக்கிய இராச்சிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் உடல் நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதேவேளை, ஸ்பெயினில் இறப்பு எண்ணிக்கை 14,500ஐத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment