இனவாத GMOAவிலிருந்து மருத்துவர்கள் விலக வேண்டும்: அசாத்! - sonakar.com

Post Top Ad

Saturday, 18 April 2020

இனவாத GMOAவிலிருந்து மருத்துவர்கள் விலக வேண்டும்: அசாத்!

https://www.photojoiner.net/image/jYm12Xy3

கொரோனா வைரஸ் சூழ்நிலையிலிருந்து இலங்கை வெளியேறுவதற்கான திட்ட வரைபெனும் பெயரில் அரச மருத்துவர் சங்கம் (GMOA) வெளியிட்டுள்ள அறிக்கை முஸ்லிம் விரோத அறிக்கையாக உருவாக்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதெனவும் தெரிவிக்கிறார் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.



அவ்வறிக்கையின் கூட்டுத் தயாரிப்பாளர்களாகக் கூறப்பட்டுள்ள Information and Communication Technology Agency (ICTA) அமைப்பினர் தமக்கும் இவ்வறிக்கைக்கும் தொடர்பில்லையென மறுதலித்துள்ள நிலையில் குறித்த செயல், அப்பட்டமான இனவாதம் என அசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இனவாத அமைப்பிலிருந்து மருத்துவர்கள் விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment